சுடச்சுட

  

  கடலூர் பாடலேசுவரர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம், நத்தப்பட்டு ஊராட்சி, உண்ணாமலைசெட்டிச்சாவடியில் 8 நாள்கள் நடைபெற்றது.

  முகாமில் மாணவர்கள் திரெளபதியம்மன் கோயில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி சாலைகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புரவுப் பணி மேற்கொண்டனர். மேலும், மரக்கன்றுகள் நடுதல், ரத்ததானம், கண்தானம், உடல் உறுப்புதானம், எய்ட்ஸ், பேரழிவு மேலாண்மை உள்ளிட்ட விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

   முகாம் நிறைவு விழாவுக்கு கல்லூரித் தலைவர் வி.முத்து தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் நித்தியானந்தம், துணைத் தலைவர் ஆதிநாராயணன், கிராம கல்விக்குழு பாலசுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி துணை முதல்வர் வினோத்குமார், திட்ட அலுவலர் மது கருத்துரையாற்றினர். முன்னதாக, கல்லூரி முதல்வர் பாலமுருகன் வரவேற்க, திட்ட துணை அலுவலர் தினேஷ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai