சுடச்சுட

  

  கைதிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

  By கடலூர்  |   Published on : 04th March 2016 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கைதிகளால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

  கொலை மற்றும் குற்றச் சம்பவங்களால் குடும்பத் தலைவர் அல்லது முக்கிய குடும்ப உறுப்பினர்களை இழந்து வருவாய்க்கு வழியின்றி தவிக்கும் குடும்பங்கள், உடல் ஊனமடைந்து பொருளீட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு, சிறை கைதிகளால் பாதிக்கப்பட்டோர் நல நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

   இதில், சம்பந்தப்பட்ட கைதி சிறைக்குள் செய்யும் பணிக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு அவரால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இந்த நிதி வழங்கப்படுகிறது.

  அதன்படி, கடலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 27 குடும்பங்களை சேர்ந்த 31 நபர்களுக்கு நிவாரணமாக ரூ.15 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த உதவித்தொகையை பெற்றனர்.

  மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் நிவாரண உதவித்தொகைகளை வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார், சிறைத்துறை கண்காணிப்பாளர் குமரேசன், மண்டல நன்னடத்தை அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai