சுடச்சுட

    

    தத்து கொடுப்பு நிறுவனத்திடம் குழந்தை ஒப்படைப்பு

    By கடலூர்  |   Published on : 04th March 2016 07:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த பெண் குழந்தை தனியார் தத்து கொடுப்பு நிறுவனத்திடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் பிரசவிக்கப்பட்ட பெண் குழந்தையை, அவரது தாயார் விட்டு, விட்டு தலைமறைவானார். எடை குறைவாக இருந்த அக்குழந்தை அதே மருத்துவமனையில் 4 மாதங்களாகப் பராமரிக்கப்பட்டு, பின்னர் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிப்.29ஆம் தேதி சேர்க்கப்பட்டது.

     குழந்தை நல்ல நிலையில் இருப்பதைத் தொடர்ந்து, உள்நாட்டு தத்துக் கொடுக்கும் நிறுவனமான, சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த கிரிஸ்ட் பெய்த்து கோம் என்ற நிறுவனத்துக்கு குழந்தையை வழங்கிட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி வியாழக்கிழமை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் அக்குழந்தையை தத்துகொடுக்கும் நிறுவனத்திடம் வழங்கினார்.  மேலும், அக்குழந்தைக்கு ஐஸ்வர்யா என்று பெயர் வைத்தார்.

     அப்போது மாவட்ட சமூக நல அலுவலர் ச.மீனா, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    இதேபோல், மாவட்டத்தில் 1999ஆம் ஆண்டு முதல் இதுவரை 122 குழந்தைகள் மீட்கப்பட்டு, தத்து கொடுக்கும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai