சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைத்தூரக் கல்வி இயக்க பொருளியல் பிரிவு சார்பில், புதுதில்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழும நிதி உதவியுடன் இயற்கை பண்ணையமும், வளம் நீடித்த வேளாண்மையும் என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது.

  கருத்தரங்க தொடக்க விழாவுக்கு தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் எஸ்.புகழேந்தி தலைமை வகித்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் கருத்தரங்கை தொடங்கி வைத்து மலரை வெளியிட்டார். கலைப்புல முதல்வர் ராஜேந்திரன் இயற்கை பண்ணையம் மற்றும் வளம் நீடித்த வேளாண்மையின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். கல்விக்குழும இயக்குநர் மணிவண்ணன் வாழ்த்துரையாற்றினார். கருத்தரங்க இயக்குநர் சுந்தர், நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். செழியன் நன்றி கூறினார்.

   கருத்தரங்கு நிறைவு விழாவில் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ராம.சந்திரசேகரன், பொருளியல்துறை முனைவர் ரவி ஆகியோர் பங்கேற்று நிறைவு உரையாற்றினர். ஏற்பாடுகளை பொருளியல் பிரிவு ஆசிரியர்கள் சுந்தர், அசோகன், செழியன், அண்ணாதுரை, குமார், விஜயன், சிவக்குமார், ராமஜெயம், கோபால், ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai