சுடச்சுட

  

  கடலூர் நகராட்சிப் பகுதியில் பல வாக்குச் சாவடி மையங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

  தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை கோட்டாட்சியர்கள் அளவிலான அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

   அதன்படி கடலூர் நகராட்சிப் பகுதியிலுள்ள வாக்குச்சாவடி மையங்களை கோட்டாட்சியர் என்.உமாமகேஸ்வரி மற்றும் தேர்தல் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

  இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் கூறியது: கடலூர் நகராட்சிப் பகுதியில் 122 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றில், மாற்றுத் திறனாளிகள் எளிதாகச் சென்று வாக்களிக்கும் வகையில் 11 வாக்குச் சாவடி மையங்களில் சாய்தளம் அமைக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், 7 மையங்களில் போதுமான குடிநீர் வசதியும், 1 வாக்குச்சாவடி மையத்தில் மின்சார வசதி இல்லாததும் தெரிய வந்துள்ளது. மேலும், 2 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள கட்டடம் போதுமான ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது என்றனர்.

   இதுபோன்ற நிலை மாவட்டத்திலுள்ள பல்வேறு வாக்குச்சாவடி மையங்களிலும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  எனவே, அனைத்து வாக்குச் சாவடிகளும், முழுமையான வசதிகள் பெறும் வகையில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டுமென பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai