சுடச்சுட

  

  முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வரவேற்றுள்ளார்.

  அவர் விடுத்துள்ள அறிக்கை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இந்திய குற்றவியல் சட்டம் 435ஆவது பிரிவின்கீழ் மத்திய அரசின் கருத்தைக் கோரவும் கடிதம் அனுப்பியுள்ளது.

   இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற உலகத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முதல்வர் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம் என அதில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai