Enable Javscript for better performance
8-ல் வணிகர் சங்கங்களின் பேரமைப்புப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் 8ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கடலூர் மண்டலத் தலைவர் டி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

    அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக வணிக வரித்துறையை கணினி மயமாக்கும் திட்டத்தின்கீழ், வணிகர்கள் இணையம் (ஆன்-லைன்) மூலமாக பதிவுச் சான்று மற்றும் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆணையை அரசு ஒருமாத காலத்துக்கு தள்ளி வைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இது வணிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

     புதிய சட்டத்தை அமல்படுத்திட வசதியாக வணிகர்களுக்கு அதிகாரிகள் மூலம் முறையாகப் பயிற்சி அளித்து, போதிய கால அவகாசம் வழங்கி அதன் பின்னர் அமல்படுத்த வேண்டும்.

     எனவே, கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில சங்கம் விடுத்த அறிவிப்பின்படி மார்ச் 8ஆம் தேதி கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai