சுடச்சுட

    

    கடலூரில் உள்ள பெரியார் அரசுக் கலைக் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் தலைமை வகித்து, கருத்தரங்கை தொடங்கி வைத்தார். ஆங்கிலம் கற்பதில் உள்ள இலக்கண மற்றும் மொழியியல் சிறப்புகளையும், எளிய முறையில் கற்பதற்கான வழிமுறைகளையும் விளக்கினார்.

    சிறப்பு விருந்தினராக புதுச்சேரியை சேர்ந்த எழுத்தாளர் பு.ராஜா பங்கேற்று சிறுகதை மரபும், ஆங்கில இலக்கியத்தில் இந்தியர்களின் பங்கும் என்ற தலைப்பில் பேசுகையில், ஆங்கிலத்தில் இந்திய தாய் மொழிகளின் கலப்படம் உள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக ஆங்கிலத் துறைத் தலைவர் ரா.ரவி வரவேற்க, மாணவி சிந்து நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai