சுடச்சுட

  

  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு விளக்கக் கூட்டம்

  By கடலூர்  |   Published on : 05th March 2016 05:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநாடு மார்ச் 10ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாடு குறித்த விளக்க தெருமுனைக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  செம்மண்டலம், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு, கடலூர் முதுநகர் மணிக்கூண்டு ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை நிலையச் செயலர் கே.லியாகத் அலிகான் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் நெல்லை மஜீது சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாநாடு நடைபெறுவதன் நோக்கம், கட்சியின் நிலைப்பாடு குறித்து பேசினார்.  பேச்சாளர் எஸ்.அப்துல்ரஜாக், மாநாட்டு பிரசாரக்குழு எஸ்.அப்துல்கரீம், கடலூர் மாவட்டச் செயலர் வி.எம்.ராஜாரஹிமுல்லா, செயலர் எஸ்.முஹம்மது இஸ்மாயில், தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் எம்.தாஜூதீன், மகளிரணித் தலைவர் ஜெ.யாஸ்மின்ஜாபர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai