சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன.

  போட்டிக்கு மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.மயில்சாமி தலைமை வகித்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கடலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் க.நரசிம்மன், மாவட்ட விளையாட்டு அலுவலர் எம்.ராஜா ஆகியோர் பங்கேற்று  பரிசுகள் வழங்கினார். இதில், வாலிபால் போட்டியில் புதுப்பாளையம் இளைஞர் நற்பணி மன்றம் முதலிடத்தையும், கீழ்மாம்பட்டு இளைஞர் நற்பணி மன்றம் 2ஆவது இடத்தையும் பிடித்தது. கபடிப் போட்டியில் காட்டுக்கூடலூர் அணி முதலிடத்தையும், ஆண்டிப்பாளையம் அணி 2வது இடத்தையும் பிடித்தன. மேலும் போட்டியில் பங்கேற்ற அணியினருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை இளையோர் மைய கணக்காளர் டி.சக்கரவர்த்தி செய்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai