சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்எல்சி நிறுவன சிறப்பு சுரங்க இயந்திர ஆபரேட்டர்கள் 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    30 ஆண்டுகளுக்கும் மேலாக பெற்றுவந்த ஈடு செய்யக்கூடிய விடுப்பு நிறுத்தப்பட்டதைக் கண்டித்தும், பணி அமர்த்தும் முறையில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும், சுரங்க அலவன்ஸ் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    முதல் நாளான வியாழக்கிழமை 1ஆவது சுரங்கத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை 2ஆவது சுரங்க வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆபரேட்டர்கள் சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பொதுச் செயலர் சிவசண்முகநாதன், பொருளர் ரத்தினகுமார், அலுவலகச் செயலர் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai