சுடச்சுட

  

  ஓமன் நாட்டில் இயந்திரம் இயக்குபவராகப் பணிபுரிய தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்தில் இயந்திரம் இயக்குபவர்களுக்கான பணிக் காலியிடங்கள் பெருமளவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்புத் தேர்ச்சியுடன், 2 ஆண்டு பணி அனுபவம், 22 முதல் 32 வயதிற்குள்பட்ட தகுதியும் தேவை.

   விருப்பம் உள்ளவர்கள் தங்களது அசல் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், கல்வி, அனுபவச் சான்று, 5 புகைப்படத்துடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச் 6ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறும் முதற்கட்ட தேர்விற்கு நேரில் செல்லலாம்.

   தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ரூ.25 ஆயிரம் வரையில் ஊதியம், இருப்பிடம், இலவச விமான டிக்கெட் மற்றும் அந்நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உள்பட்டு இதர சலுகைகளும் வழங்கப்படும். மேலும், விவரங்களை 044-25505886, 22502267 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது w‌w‌w.‌o‌m​c‌m​a‌n‌p‌o‌w‌e‌r.c‌o‌m​ என்ற இந்நிறுவன வலைதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.

  எனவே, கடலூர் மாவட்டத்தில் தகுதியுள்ள பதிவுதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai