Enable Javscript for better performance
கடலூர் நகர்மன்றக் கூட்டத்தில் 36 தீர்மானங்கள்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் சீரமைப்புப் பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கடலூர் நகர்மன்ற அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நகர்மன்றத் தலைவர் ஆர்.குமரன் தலையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார், ஆணையர் ரா.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் 36 தீர்மானங்கள் குறித்து தலைவர் பேசியதைத் தொடர்ந்து, தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. இதனால், கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் நிறைவு பெற்றது.

     கூட்டத்தில், நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் திருவந்திபுரம், கேப்பர்மலை தலைமை நீரளிப்பு நிலையங்கள், சாவடி நீரளிப்பு நிலையங்களில் டிசம்பர் வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ள ரூ.40 லட்சம் அனுமதித்தல், வடகிழக்கு பருவ மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.63.80 லட்சத்தில் பெறப்பட்ட ஒப்புந்தப் புள்ளிக்கு அனுமதி அளித்தல், கெடிலம் ஆற்றில் அண்ணாபாலத்தின் ஒரு பகுதி உடைந்ததால் அதன் மேல் குடிநீர்க் குழாய் அமைக்க ரூ.84 லட்சம், கழிவுநீர் குழாய் அமைக்க ரூ.94.5 லட்சம் அனுமதிப்பது.

     கேப்பர்மலை சாலை, சூரசம்ஹார தெரு, வரவூர் மாரியம்மன் கோயில் தெரு, சராங்கு தெரு, புருகீஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் புதிய அங்கன்வாடி மையம் அமைப்பது, பாரதிசாலையில் சேதமடைந்த மழைநீர் வடிகாலை சீரமைக்க ரூ.14 லட்சம், வில்வநகருக்கு ரூ.9.50 லட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு, மஞ்சக்குப்பம் சலவைக் கூடத்துக்கு தடுப்புச்சுவர், தண்ணீர் தொட்டி கட்ட ரூ.9.50 லட்சம், மஞ்சக்குப்பம் எரிவாயு தகனமேடையை சீரமைக்க ரூ.24 லட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai