சுடச்சுட

  

  சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், நெட்பிஷ் நிதி உதவியுடன் கடல் வளம் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழப்புணர்வுப் போட்டிகளை அண்மையில் நடத்தியது.

  இதில் ஓவியம், பேச்சு, கவிதை உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன. தாவரவியல் துறைத் தலைவர் கே.ஜி.காந்தியப்பன் போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர்  ஜி.வணங்காமுடி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.

   எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி  எஸ்.வேல்விழி பங்கேற்று பேசுகையில், கடல்வளம் பாதுகாப்பு, வளங்குன்றா மீன்பிடி முறைகள் குறித்து எடுத்துரைத்தார். மத்திய கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணைய மேலாளர் ஆர்.சதீஷ்ஷோயாக் பங்கேற்று, அலங்கார மீன் வளர்ப்பில் தொழில் வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தார்.

   விலங்கியல் துறைப் பேராசிரியர் என்.ராஜேந்திரன், தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் ஜி.கோவிந்தன் உள்ளிட்டோர் பேசினர்.  எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஆர்.இளங்கோவன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai