சுடச்சுட

  

  காட்டுமன்னார்கோயிலில் உள்ள எம்.ஆர்.கே  தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு இயந்திரவியல்துறை, மின்னியல் மின்னணுவியல் துறை, மின்னியல் தொலை தொடர்புத்துறை மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வளாக நேர்காணல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  இம்முகாமில் 103 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

  இவர்களில் 46 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். சென்னை சின்டெக்ஸ் பிஏபிஎஸ் லிமிடெட் நிறுவன முதுகலை மேலாளர் ஜே.விபின், விஸ்டா டெலி சர்வீஸ் குழுத் தலைவர் எஸ்.சஞ்சீவி ஆகியோர் வளாக நேர்காணலை நடத்தினர்.

  இயந்திரவியல் துறையில் 26 மாணவ, மாணவிகளும், மின்னியல் மின்னணுவியல் துறையில் 18 மாணவ, மாணவிகளும், மின்னியல் தொலைதொடர்புத்துறையில் 2 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி தலைவர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கே.ஆனந்தவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai