Enable Javscript for better performance
குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்: வாகனம் மூலம் விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்: வாகனம் மூலம் விழிப்புணர்வு

    By கடலூர்  |   Published on : 05th March 2016 05:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு விளம்பர ஊர்தி சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு அண்மையில் வந்தடைந்தது. இந்த விளம்பர ஊர்தியை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஆலோசனைகள், தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வு, குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான இணை உணவு வழங்குதல், பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம் திட்டம் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகள் ஊர்தியில் இடம் பெற்றிருந்தன. இந்த ஊர்தி கடலூர் உழவர் சந்தை, வடலூர், சேத்தியாதோப்பு, சோழதரம் உள்ளிட்டப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கோ.அன்பழகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai