சுடச்சுட

  

  சாத்திப்பட்டு கிராம சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

  By நெய்வேலி  |   Published on : 05th March 2016 05:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மண் அரிப்பால் சேதம் அடைந்த சாத்திப்பட்டு கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  பண்ருட்டி வட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்கு உள்பட்டது சாத்திப்பட்டு கிராமம். இங்கு முந்திரி பதப்படுத்தல் மற்றும் அது தொடர்பான தொழிற்சாலைகள் உள்ளன. இக்கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

   கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை, வெள்ள பெருக்கில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, சாத்திப்பட்டு செல்லும் 3 கி.மீ. தூர சாலை மோசமான நிலையில் சேதம் அடைந்தது. சாலை ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு 2 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளம் இதுவரை சரி செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்தச் சாலை வழியே நான்கு சக்கர வாகனங்கள் வரும் போது, எதிரே வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர்.

   இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கனமழையால் சேதமடைந்த கிராம சாலையை சீரமைக்க அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது. இச்சாலையில் தினமும் ஏராளமானோர் பயன்படுத்தும் நிலையில், சீரமைப்புப் பணி முக்கியத்துவம் பெறுகிறது. சேதமடைந்த சாலையில் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai