சுடச்சுட

    

    சிதம்பரத்தில் இரு நாட்டியாஞ்சலி விழா: மார்ச் 7-இல் தொடக்கம்

    By சிதம்பரம்  |   Published on : 05th March 2016 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்கள் சார்பிலும், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பிலும் நாட்டியாஞ்சலி விழா மார்ச் 7-ல் தொடங்கி 5 நாள்கள் தனித்தனியாக  நடைபெறுகின்றன.

    சிதம்பரம் நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழாவானது, டாக்டர்கள் கபிலா வாத்ஸ்யாயன், ஆர்.நாகசாமி மற்றும் கலை ஆர்வலர்கள் குழுவாக இணைந்து 1981ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தப்பட்டு வந்தது. இந்த விழா, நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை மூலம் கடந்த 33 ஆண்டுகளாக 2014ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டு வந்தது.

    இந்நிலையில், நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இதையடுத்து, 2015ஆம் ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை தில்லை நாட்டிய அஞ்சலி அறக்கட்டளை என்ற பெயரில், கோயில் பொது தீட்சிதர்களே நடத்தினர். மறுபுறம், நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் தெற்குரத வீதியில் உள்ள ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை வளாகத்தில் 34ஆவது நாட்டியாஞ்சலி விழாவை நடத்தினர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு பொது தீட்சிதர்களின் தில்லை நாட்டிய அஞ்சலி அறக்கட்டளை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயிலிலும், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 35ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்குரதவீதி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை வளாகத்திலும் நடைபெற உள்ளது. இந்த விழாக்கள் மார்ச் 7ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் இரு இடங்களில் தனித்தனியாக நடைபெறுகிறது.

    நடராஜர் கோயிலில், பொதுதீட்சிதர்களே நாட்டியாஞ்சலி விழாவை நடத்துகின்றனர். தெற்குவீதி ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெறும் விழாவை, அறக்கட்டளைத் தலைவர் ஏ.கே.நடராஜன், துணைத் தலைவர்கள் கே.சுவாமிநாதன், செயலர்கள் ஏ.சம்பந்தம், ஆர்.நாகசாமி, இணைச் செயலர் ஆர்.நடராஜன், பொருளர் எஸ்.ஆர்.ராமநாதன், உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, ஆர்.முத்துகுமரன், வி.பாலதண்டாயுதம், ஆர்.சபாநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் நடத்துகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai