சுடச்சுட

  

  மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் திட்டக்குடி அடுத்துள்ள வதிஷ்டபுரத்தில் டெங்கு காய்ச்சல்  விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

  முகாமில் மங்களூர் வட்டார மருத்துவர் கலைச்செல்வி, கீரனூர் நிலைய மருத்துவர் விவேக், இளநிலை பூச்சியியல் நிபுணர் ராஜசேகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர் பங்கேற்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து கண்டறிந்தனர்.

  பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம், பப்பாளிச் சாறு வழங்கப்பட்டது.

  மேலும், கொசு பரவும் இடங்களை கண்டறிந்து தேவையற்ற பொருள்களை அகற்றினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai