சுடச்சுட

  

  கடலூரில் நியாயவிலைக் கடைகளுக்கான புதிய கட்டடங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் அண்மையில் திறந்து வைத்தார்.

  கடலூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் மஞ்சக்குப்பம் பகுதியில் ஜனதா-1 மற்றும் 2 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வந்தன. வாடகைக் கட்டடங்களில் இயங்கி வந்த இந்த கடைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தனது சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதில் கடலூர் ஈஸ்வரன் கோயில் அருகிலும், தட்சிணாமூர்த்தி நகரிலும் தலா ரூ.5 லட்சம் செலவில் நியாய விலைக் கடைகள் கட்டப்பட்டன.

   புதிய கட்டடங்களை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் புதன்கிழமை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்களை வழங்கினார்.

  நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் ஆர்.குமரன், துணைத்தலைவர் ஜி.ஜெ.குமார், விற்பனை சங்கத் தலைவர் பி.அருணாச்சலம், கடலூர் பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai