சுடச்சுட

  

  பண்ருட்டி நகர மக்களின் கவனத்தை ஈர்க்கும் திருவோடு மரம்

  By நெய்வேலி  |   Published on : 05th March 2016 05:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பண்ருட்டியில் வளர்ந்துள்ள திருவோடு மரம்  அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

  கடலூர் மாவட்டம் பண்ருட்டி, லட்சுமிநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் கவிதை கணேசன். மாவட்ட உணவு தரப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு, அரியவகை மரங்கள், செடிகளை வளர்ப்பதில் அலாதி ஆர்வம் உண்டு. மேலும், பழங்கால நாணயங்கள், பொருள்களையும் சேகரித்து வருகிறார்.

  இவரது வீட்டுத் தோட்டத்தில் சிவனுக்கு உகந்த ருத்திராட்சம், வில்வம், நாகலிங்கம், சிவலிங்க விதை (ஐவிரல்கோவை), கொன்றை, கருநொச்சி, கரு ஊமத்தை, கருந்துளசி, பிரம்மகமலம், பேய்மிரட்டி, நிலவேம்பு, நால்வகை பிரண்டை, நால்வகை கத்தாழை, மூவகை வெற்றிலை, திப்பிலி, மஞ்சள் நுணா, சிறுகுறிஞ்சான், வேதியர் முருங்கை, தொட்டா சிணுங்கி உள்ளிட்ட 150 வகை மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார்.

   மேலும், இவரது வீட்டில் வளர்ந்துள்ள திருவோடு மரம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இம்மரத்தின் காய்களில் உள்ள திட, திரவப் பொருளானது, நுரையீரல் தொடர்பானப் பிரச்னைகளுக்கும், சுகப் பிரசவத்துக்கும் பயன்படுமாம்.  திருவோடு மரத்தின் காய் பழுத்தபின் அதனை சரி பாதியாக அறுத்து, நன்கு காய வைத்து அவற்றை சன்னியாசிகள்  திருவோடாகப் பயன்படுத்துவது நெடுங்கால வழக்கமாக உள்ளது. திருவோட்டில் சேமிக்கப்படும் உணவு கெடாது என்றும் கூறப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai