சுடச்சுட

  

  நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராமப் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.

  சட்டப் பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் நிறுத்தப்பட்டுள்ளார். கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பாமகவினர் குறைந்தது 3 முறையாவது தொகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

  அதன் அடிப்படையில்,வடகுத்து ஊராட்சி மன்றத் தலைவர் கோ.ஜெகன், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொது மக்களை ஏற்கெனவே இருமுறை சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்நிலையில், தற்போது, மூன்றாவது முறையாக பண்ருட்டி பகுதியில் உள்ள கிராமங்களில் அன்புமணி ராமதாஸின் சாதனை கையேட்டினை வழங்கி மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai