சுடச்சுட

  

  பிளஸ் 2 பொதுத் தேர்வு:  மாவட்டத்தில் 33,839 பேர் எழுதினர்

  By கடலூர்/சிதம்பரம்  |   Published on : 05th March 2016 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ்-2 பொதுத் தேர்வினை 33,839 மாணவ, மாணவிகள் எழுதினர்.

  தமிழகம், புதுவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. கடலூர் மாவட்டத்தில் இத்தேர்வினை 196 பள்ளிகளிலிருந்து 30,134 மாணவ, மாணவிகள் நேரடியாக எழுதினர். கடலூரில் புனித வளனார் பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பிளஸ்2 பொதுத்தேர்வினை மாவட்டத்தில் மொத்தம் 33,839 பேர் எழுதுகின்றனர். இதில், பள்ளிகளிலிருந்து நேரடியாக 14,218 மாணவர், 15,916 மாணவிகள் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட தற்போது 1,843 பேர்  அதிகமாக தேர்வெழுதுகின்றனர்.  3,705 பேர் தனித்தேர்வர்களாக எழுதுகின்றனர். இவர்களில் 2,302 பேர் ஆண்கள், 1,403 பேர் பெண்களாவர். தேர்வுக்காக 82 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

   முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 82 பேரும், துறை அலுவலர்கள் 82 பேரும், வழித்தட அலுவலர்கள் 20 பேரும், பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் 205 பேரும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக சொல்வதை எழுதுபவர்கள் 46 பேரும் மற்றும் அறை கண்காணிப்பாளர்களாக 1,546 நபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்

  சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள 14 பள்ளிகளைச் சேர்ந்த 2,776 மாணவ, மாணவிகள் 7 மையங்களில் தேர்வு எழுதினர். வீனஸ் மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில் பார்வையற்ற மாணவர்கள் 4 பேரும், காது கேளாத மாணவர்கள் 3 பேரும் தேர்வு எழுதினர். நந்தனார் ஆண்கள் பள்ளி மையத்தில் மனவளர்ச்சி குன்றிய மாணவர் ஒருவரும், நந்தனார் பெண்கள் பள்ளி தேர்வு மையத்திலும், நிர்மலா மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்திலும் ஊனமுற்ற மாணவர்கள் இருவர் உள்ளிட்ட 10 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களுக்கு தேர்வு எழுத கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai