Enable Javscript for better performance
மீன் எண்ணெய் நிறுவனத்தை அப்புறப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மீன் எண்ணெய் நிறுவனத்தை அப்புறப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

    By கடலூர்  |   Published on : 05th March 2016 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் சிப்காட்டில் அமைந்துள்ள மீன் எண்ணெய் நிறுவனத்தை அப்புறப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

    இதுகுறித்து அக் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் மீன் எண்ணெய் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தால் ஏற்படும் துர்நாற்றத்தால் செம்மங்குப்பம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதிப்படுவதோடு பல வகையான நோய்களுக்கும் ஆளாகின்றனர். எனவே, இந்த ஆலையை மூட வேண்டும் என கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

     இதுதொடர்பாக, 10-க்கும் மேற்பட்டோர் மீது பொய் வழக்கு போன்ற காவல் துறையின் நடவடிக்கையைக் கண்டிக்கிறோம். இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும். எண்ணெய் ஆலையை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் வலியுறுத்தியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai