சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் களப் பணியாளர்களுக்கு தலைக்கவசம் வழங்கும் விழா குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ சொரத்தூர் ரா.ராஜேந்திரன் தலைமை வகித்து, தொகுதிக்குள்பட்ட 251 களப் பணியாளர்களுக்கு தலைக் கவசம் வழங்கினார். ஒன்றிய அம்மா பேரவைச் செயலர் வீரமணி வரவேற்றார். ஒன்றியச் செயலர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய துணைத் தலைவர் மல்லிகாதங்கப்பன், கட்சியின் ஒன்றிய துணைச் செயலர் சிவராமலிங்கம், குறிஞ்சிப்பாடி பேரூர் கழகச் செயலர் ஆனத்தபாஸ்கரன், வடலூர் பேரூர் கழகச் செயலர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai