சுடச்சுட

  

  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கடலூர் அருகே உள்ள குறவன்பாளையம் கிராமத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

  மாவட்ட முதன்மை சார்பு நீதிபதியும், ஆணைக்குழுவின் செயலருமான எம்.தாண்டவன் தலைமை வகித்தார். மக்கள் நீதிமன்ற நீதிபதி ஜி.குமணன் முன்னிலை வகித்தார். வழக்குரைஞர்கள் எஸ்.ரவிச்சந்திரன், கே.கோடீஸ்வரன் ஆகியோர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான சட்டங்கள் குறித்து விளக்கினர். முன்னதாக சட்ட இணைத் தொண்டர் ஆர்.சண்முகம் வரவேற்க, முதுநிலை நிர்வாக உதவியாளர் ஆர்.ரங்கநாதன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai