சுடச்சுட

  

  கடலூர் நகராட்சியில் 3,344 வீடுகளில் கழிப்பறை கட்ட பேங்க் ஆப் பரோடா வங்கி நிதியுதவி வழங்கியுள்ளது.

  கடலூர் நகராட்சியில் பிரதமரின் திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நகராட்சியில் தனிநபர் கழிவறைகள் மற்றும் பொதுக் கழிப்பிடம் கட்டும் பணிகளில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

   தனிநபர் கழிப்பறைக் கட்டும் திட்டத்தில் ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது.

  இதில் மத்திய அரசு 40 சதவீதம், மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் தலா 20 சதவீதம் தொகையை வழங்கும். மீதமுள்ள 20 சதவீதம் தொகையை பயனாளி செலவிட வேண்டும்.

   எனினும், இத்தொகையைச் செலவிட முடியாத பயனாளிகளுக்கு உதவிடும் வகையில் கடலூர் நகராட்சிக்கு பேங்க் ஆப் பரோடா வங்கி ரூ.1.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. இத்தொகை 3,344 பயனாளிகளின் பங்குத் தொகையாக கழிப்பறை கட்டும் திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது.

  அண்மையில் நகராட்சி ஆணையர் ரா.முருகேசனிடம் இதற்கான காசோலையை வங்கியின் மேலாளர் பா.மகேஸ்வரி வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai