சுடச்சுட

  

  கடலூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா மற்றும் அதிமுக அரசை விமர்சித்து பொதுக்கூட்டம் கிழக்கு ராமாபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

  ஒன்றியச் செயலர் டி.காசிராஜன் தலைமை வகித்தார். கடலூர் கிழக்கு மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று ஆற்றிய சிறப்புரை:

  கடந்த திமுக ஆட்சியில் குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டும், இதுவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படவில்லை. மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகையில், தமிழகம் முழுவதும் சாலை வசதி, சென்னையில் மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவந்தது திமுக தான். அதிமுக அரசு தற்போது காலம் கடந்த பிறகு புதிய திட்டங்களை அறிவிக்கிறது. கடலூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் முழுமையாக வழங்கப்படவில்லை என்றார்.

  கடலூர் நகர் செயலர் கே.எஸ்.ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், பி.சுப்பிரமணியன், ஒன்றிய நிர்வாகிகள் கே.சாரங்கபாணி, பி.துரை, எஸ்.ராமலிங்கம், ஆர்.எஸ்.மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ஒன்றிய துணைச் செயலர் வி.ஞானசேகரன் வரவேற்க, ஊராட்சி செயலர் பி.ராமலிங்கம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai