சுடச்சுட

    

    கடலூர்-திருச்சி பயணிகள் ரயிலை முதல் பிளாட்பாரத்தில் நிறுத்த வலியுறுத்தல்

    By கடலூர்  |   Published on : 06th March 2016 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர்-திருச்சி பயணிகள் ரயிலை முதல் பிளாட்பாரத்திலேயே நிறுத்த வேண்டுமென தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், தென்னக ரயில்வே பொதுமேலாளர், திருச்சி கோட்ட மேலாளர் ஆகியோருக்கு அண்மையில் அனுப்பியுள்ள மனு: கடலூர் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து தினமும் காலை 6 மணிக்கு திருச்சிக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருச்சியிலிருந்து கடலூர் வந்து பின்னர் விருத்தாசலம் சென்று நிறுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், விருத்தாசலம் செல்வதால் வருமான இழப்பு ஏற்படுவதாகக் கூறி தற்போது கடலூரிலேயே நிறுத்தப்படுகிறது.

    இந்த ரயில் கடலூரிலிருந்து புறப்படும் போதும், கடலூர் வந்து சேரும் போதும் முதல் நடைமேடையில் வந்து சேர்ந்தது.

    தற்போது இந்த ரயில் 4வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து இயக்கப்படுகிறது. ஆனால் அந்த பிளாட்பாரத்தில் போதுமான அடிப்படை வசதி இல்லை. தண்டவாளத்தை கடக்கும் வகையிலான மேம்பாலத்தை முதியோர், மாற்றுத்திறனாளிகள் சுமைகளுடன் கடக்க முடியாத நிலை உள்ளது.

    எனவே, இந்த ரயிலை, வழக்கம் போல் முதலாவது பிளாட்பாரத்திலேயே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai