கடலூர் மாவட்டத்தில் 19.94 லட்சம் வாக்காளர்கள்
By கடலூர் | Published on : 06th March 2016 07:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 19.94 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.சுரேஷ்குமார் சனிக்கிழமை வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் 19,94,357 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 9,97,379 பேர், பெண்கள் 9,96,907 பேர் அடங்குவர். மாவட்டம் முழுவதும் 2,256 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திட்டக்குடி (தனி) தொகுதியில் 241 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 2,06,909 மொத்த வாக்காளர்களில் 1,02,778 ஆண்கள், 1,04,126 பெண்கள், இதரர் 5 பேர்களாவர். விருத்தாசலம் தொகுதியில் 272 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,32,531 வாக்காளர்களில் 1,17,662 பேர் ஆண்கள், 1,14,859 பேர் பெண்கள், 10 பேர் இதரர்களாவர். நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் 226 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,00,261 மொத்த வாக்காளர்களில் 1,01,485 பேர் ஆண்கள், 98,768 பேர் பெண்கள், 8 பேர் இதரர்களாவர்.
பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 251 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,26,590 மொத்த வாக்காளர்களில் 1,11,968 பேர் ஆண்கள், 1,14,612 பேர் பெண்கள், 10 பேர் இதரர். கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 228 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,28,541 மொத்த வாக்காளர்களில் 1,11,494 பேர் ஆண்கள், 1,17,025 பேர் பெண்கள், 22 பேர் இதரர்களாவர்.
குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 251 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,21,871 மொத்த வாக்காளர்களில் 1,11,021 பேர் ஆண்கள், 1,10,846 பேர் பெண்கள், இதரர் 4 பேர்களாவர்.
புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் 288 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 2,38,798 வாக்காளர்களில் ஆண்கள் 1,20,411 பேர், பெண்கள் 1,18,387 பேர்களாவர்.
சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 253 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,28,168 மொத்த வாக்காளர்களில் ஆண்கள் 1,13,308 பேர், பெண்கள் 1,14,853 பேர், இதரர் 5 பேர்களாவர்.
காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் 246 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,10,688 மொத்த வாக்காளர்களில் ஆண்கள் 1,07,252 பேர், பெண்கள் 1,03,431 பேர், இதரர் 5 பேர்களாவர்.
மாவட்டத்தில் இறப்பு மற்றும் இரட்டைப்பதிவு இனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 23,563 பேரை நீக்கம் செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது.