சுடச்சுட

  

  சிதம்பரம் அருகே கீரப்பாளையம் பகுதியில் உள்ள காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

  கல்லூரி நிர்வாக அறங்காவலர் சௌந்தரபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்துரையாற்றினார். முகாமில், டிவிஎஸ் நிறுவன பிரதிநிதி கணேஷ் பங்கேற்று மாணவர்களை தேர்வு செய்தார்.

  இதில் மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளைச் சேர்ந்த 28 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு டிவிஎஸ் கேரளா நிறுவனத்தில் பணிநியமனத்துக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் செந்தில்குமார் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, வேலைவாய்ப்பு பணி அலுவலர் ஜெகன் வரவேற்க, இயந்திரவியல் துறைத் தலைவர் அருண்பிரகாஷ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai