Enable Javscript for better performance
தகுதி அடிப்படையில் பொறுப்பு: ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தகுதி அடிப்படையில் பொறுப்பு: ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

    By கடலூர்  |   Published on : 06th March 2016 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தகுதி அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து இந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் ரா.எல்லப்பன், செயலர் வீ.செல்வராசு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு முதன்மைக் கல்வி அலுவலர் முகாம் அலுவலராக இருக்கும் நடைமுறை 1980ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டிலிருந்து முதன்மைக் கல்வி அலுவலருக்குத் துணையாக மூத்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரை கூடுதல் முகாம் அலுவலராக முதன்மைக் கல்வி அலுவலர் நியமித்துக் கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.

    ஆனால், கடலூர் மாவட்டத்தில் உரிய தகுதி இல்லாதவர்கள் கூடுதல் முகாம் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, தகுதி உள்ளவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இல்லையெனில் விடைத்தாள் திருத்தும் பணியை சங்கம் சார்பில் புறக்கணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai