Enable Javscript for better performance
தமாகா கொடியேற்று விழா- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சிதம்பரம் பகுதியில் 18 இடங்களில் கொடியேற்றுவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணித் தலைவர் கே.ரஜினிகாந்த், நிர்வாகிகள் எல்.இ.வெற்றிவீரமணி, கே.நாகராஜன், ராஜா சம்பத்குமார், எஸ்.கே.வைத்தி, மாணவரணி மாவட்டத்  தலைவர் என்.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலர்கள் பி.தர்மராஜ், கே.நரசிம்மராஜன் ஆகியோர் பங்கேற்று தமாகா கொடியேற்றினர்.

     நிகழ்ச்சியில், கொண்டசமுத்திரம், கோவிந்தராஜன்பேட்டை, அகரபுத்தூர், மேலகடம்பூர், ஈச்சம்பூண்டி, நாஞ்சலூர், எம்.கே.தோட்டம், விபிஷணபுரம், வேளக்குடி, வல்லம்படுகை, சி.பரமேஸ்வரநல்லூர், வடக்குதில்லைநாயகபுரம், சி.முட்லூர், மேல்அனுவம்பட்டு, வடக்குச்சாவடி, நஞ்சைமகத்து வாழ்க்கை, கிள்ளை, தாகம் தீர்த்த பிள்ளையார் கோயில் தெரு உள்ளிட்ட 18 இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. மாநில இணைச் செயலர் ஏ.எஸ்.வேல்முருகன் இனிப்பு வழங்கினார்.

     நிகழ்ச்சியில் சிதம்பரம் நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன், வட்டாரத் தலைவர்கள் வீரமுத்து, சேதுமாதவன், மாவட்ட துணைத் தலைவர் பி.கே.காந்தி, மாவட்ட பொதுச் செயலர் பாபு சந்திரசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட தொண்டரணித் தலைவர் கோ.குமார், மாநில மாணவரணி துணைத் தலைவர் எஸ்.கிஷோக்குகன், மாவட்ட மகளிரணித் தலைவி கே.ராஜலட்சுமி, மாநில மகளிரணிச் செயலர் ஜி.சந்தானமேரி, மாவட்ட வளைதளப் பிரிவு எம்.ராஜாராமன், மாநில சிறுபான்மைப் பிரிவு செயலர் ஸ்டீபன், இளைஞரணி நிர்வாகிகள் என்.கணேஷ், துரை சிங்காரவேல், கார்த்திக், முபாரக்அலி, சிவக்குமார், மகளிரணி தில்லை செல்வி, ஜனகம், பூமா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பரங்கிபேட்டை வட்டாரத் தலைவர் வண்டிகேட் நட்ராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai