சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களின் விவரம், தொலைபேசி எண்களை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ளார்.

  இதுகுறித்த அவரது செய்திக் குறிப்பு: திட்டக்குடி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வி.ஜவஹர் நியமிக்கப்படுகிறார். இவரை 94454 77830, 04142-230459 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக கோட்டாட்சியர் பி.எம்.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 94450 00427, 04143-260248 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக தனித்துணை ஆட்சியர் (நிலம் எடுப்பு) எம்.தினேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 94422 04939, 04142-262238 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் எம்.மதியழகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 94425 28217, 04142-232490 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக கோட்டாட்சியர் என்.உமாமகேஸ்வரி நியமிக்கப்படுகிறார். இவரை 94450 00426, 04142-231284 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) வி.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, 94433 98639, 04142-222660 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் எஸ்.தங்கவேலு நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 94450 00209, 04142-230223 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக சார் ஆட்சியர் பி.எஸ்.விஜியலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, 94450 00425, 04144-222256, 227374 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக கலால் உதவி ஆணையர் முத்துகுமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 94450 74577, 04142-231014 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  மேலும், தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த அறையை 04142-285000, 01, 02, 03, 04 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதுதவிர, 18004257019 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai