சுடச்சுட

    

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக நன்மை கருதியும், மக்கள் நலமுடன் வாழ வேண்டியும் கோடி அர்ச்சனை, லட்ச ஹோமம் மற்றும் அதிருத்ர மஹாயாகம் திங்கள்கிழமை (மார்ச் 7) நடத்தப்படுகிறது.

     யஜுர் வேதத்தின் மையப் பகுதியானதும், நமசிவாய எனும் மந்திரத்தை தன்னுள் கொண்டதும், முழுவதும் சிவபெருமானையே போற்றுவதும் ஆகிய ஸ்ரீ ருத்ரம் அளப்பரிய சக்தி கொண்டது, பரமேஸ்வரரின் பேரருளைப் பெற்றுத் தரக்கூடியது, மங்களங்களை வழங்கக் கூடியது என நம்பப்படுகிறது.

     அதிருத்ர மஹா யாகம் என்பது, ஸ்ரீ ருத்ரத்தினை 14,641 முறை ஜபித்து ஹோமம் செய்யப்படுவதாகும். இந்த யாகம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்களால் திங்கள்கிழமை நடத்தப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai