சுடச்சுட

  

  போராட்ட கால ஊதியத்தை வழங்க வேண்டும்: அரசு ஊழியர் சங்கம்

  By கடலூர்  |   Published on : 06th March 2016 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு ஊழியர்களின் 10 நாள் போராட்டக்கால ஊதியத்தை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ரா.தமிழ்ச்செல்வி கூறினார்.

  தமிழ்நாடு அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் போராட்ட விளக்கக் கூட்டம் மற்றும் சர்வதேச மகளிர் தின விழா கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ரா.தமிழ்ச்செல்வி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று போராட்டம் குறித்து விளக்கினார்.

  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் 70-க்கும் மேற்பட்ட துணை சங்கங்கள், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் இணைந்து 10 நாள்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம். இதனைத் தொடர்ந்து கடந்த பிப்.19ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் எங்களது கோரிக்கைகளில், 11 கோரிக்கைகளுக்கு அறிவிப்பு வெளியிட்டார். இவற்றில் தற்போது 8 கோரிக்கைகளுக்கு அரசாணை பெறப்பட்டுள்ளது.

  மேலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஆராய வல்லுநர் குழு அமைத்தல், காலமுறை ஊதியம் பெறுவோர் பிரச்னை, மீண்டும்  நிர்வாகத் தீர்ப்பாயம் அமைத்தல் குறித்து அரசாணை வெளியிடப்படவில்லை. இதனை உடனடியாக வெளியிட வேண்டும்.

  எங்களது 10 நாள் போராட்டத்தை சட்ட விரோதம் என்றோ, ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றோ அரசு அறிவிக்கவில்லை. எனவே, 10 நாள் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றார் அவர்.

  நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலர் ஏ.ரஹீம், மாவட்டத் தலைவர் ஆர்.அறிவழகன், செயலர் ஜெ.கிறிஸ்டோபர், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் என்.காசிநாதன், துணைத் தலைவர் என்.ஜனார்த்தனன், இணைச் செயலர் பி.மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai