சுடச்சுட

    

    வாக்களித்த விவரம் அறியும் வசதி: கடலூர் தொகுதியில் அறிமுகம்

    By கடலூர்  |   Published on : 06th March 2016 06:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதன்முறையாக  அறிமுகப்படுத்தப்படுகிறது.

    கடந்த கால தேர்தல்களில் வாக்குச் சீட்டில் முத்திரைக் குத்தி அதனை வாக்குப்பெட்டியில் செலுத்தும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பொத்தானை அழுத்தி வாக்குச்செலுத்தும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதில், முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளதாக பல்வேறு கட்சியினரும் ஒவ்வொரு தேர்தலின் போதும் கூறிவருகின்றனர். எனவே, வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டிய நிலை தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, வாக்காளர்கள் தனது வாக்கினை செலுத்தும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தியதும், அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் தனியாக ஒரு துண்டுச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக வாக்குப்பதிவு இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த புதியமுறை மாவட்டத்தில் கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டுமே பரிசோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், இந்த புதிய இயந்திரத்துக்கு விவிபிஏடி

    (யயடஅப) என பெயரிடப்பட்டுள்ளது. இதில், தனியாக ஒரு சீட்டு அச்சடிக்கப்பட்டு வெளியே வரும். அதனை வாக்காளர் பார்வையிட மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வெளியே எடுத்துச் செல்ல முடியாது. வாக்கு எண்ணிக்கையின் போது இயந்திரத்தில் பதிவானதும், இந்தச் சீட்டில் உள்ளதும் ஒப்பிட்டு பார்க்கப்படும்.

    இந்த இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து கடலூர் தொகுதியில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். மேலும், அனைத்துக் கட்சியினருக்கும் விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai