சுடச்சுட

    

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் சட்டப் பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் திருப்பாதிரிபுலியூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

    தொகுதிச் செயலர் மு.அறிவுடைநம்பி தலைமை வகித்தார்.  துணைச் செயலர் ஆறு.சுகுமாறன், ஒன்றிய அமைப்பாளர் க.சித்தன், செயலர் மொ.வீ.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன், பொருளர் சி.வே.கெய்க்வாட்பாபு ஆகியோர் கருத்துரையாற்றினர். மண்டல அமைப்புச் செயலர் சு.திருமாறன், மக்களவை தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரசு ஊழியர் ஐக்கியப்பேரவை முதன்மைச் செயலர் ச.பாவாணன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிதிச் செயலர் தங்க.அறச்செல்வன் ஆகியோர் பேசினர்.

     கூட்டத்தில், மக்கள் நலக் கூட்டணியின் வெற்றிக்காக வீடு, வீடாகச் சென்று பரப்புரையில் ஈடுபடுவது, தெருமுனைப் பிரசாரம், பொதுக்கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     நிர்வாகிகள் இல.திருமேனி, ச.முத்து, ப.நாகவேந்தன், ந.கோவிந்தன், வைதேகிமகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மாவட்ட செய்தித் தொடர்பாளர் பால.புதியவன் வரவேற்க, ப.ரா.முரளி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai