சுடச்சுட

    

    சிதம்பரத்தில் மர்ம நபர்கள் வீடு புகுந்து ஐந்தரை பவுன் நகைகளை திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    சிதம்பரம் கனகசபை நகர் 8ஆவது குறுக்குத்தெருவில் மாடி வீட்டில் வசிப்பவர் பாஸ்கர். இவர் கும்பகோணத்தில் ஆசாரி வேலை செய்து வருகிறார். வீட்டில் ஒருஅறையில் இவரது மனைவி சித்ரா (45) மற்றும் அவரது இருமகள்கள் மட்டும் வெள்ளிக்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது, மர்ம நபர்கள் வீட்டின் பின்புறக் கதவை நெம்பி உள்ளே புகுந்து, அறையின் பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் நகைகளை திருடிக் கொண்டு தலைமறைவாகினராம். காலையில் சித்ரா எழுந்து

    பார்த்தபோது நகை திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்து அவரது புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai