சுடச்சுட

  

  3ஜி சேவையை விரிவுபடுத்த வேண்டும்: அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்

  By கடலூர்  |   Published on : 06th March 2016 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டம் முழுவதும் 3ஜி சேவையை விரிவுபடுத்த வேண்டுமென அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

  அனைத்திந்திய தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் (ஏஐபிஎஸ்என்எல்இஏ) கடலூர் மாவட்ட 7ஆவது மாநாடு கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.தனசேகர் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் மூத்த பொதுமேலாளர் பி.சந்தோசம், சங்கத்தின் மாநிலச் செயலர்கள் எஸ்.சிவக்குமார், பி.உதயசூரியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ரா.ஸ்ரீதர், கே.டி.சம்பந்தம், ஆர்.ஜெயபாலன், சங்கத்தின் புதுவை செயலர் ஜி.சதாசிவம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

   மாநாட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது. இந்த நிறுவனத்தை தொடர்ந்து லாபம் ஈட்டச் செய்யும் வகையில் மேம்படுத்த தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து பொதுத்துறை நிறுவனமாக நடத்திட போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் 3ஜி சேவையை விரிவுப்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

   முன்னதாக மாநில துணைத் தலைவர் எஸ்.நடராஜன் வரவேற்க, மாவட்டச் செயலர் பி.வெங்கடேசன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai