Enable Javscript for better performance
ஆற்றில் இளைஞர் சடலம்- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணையாற்றில் மிதந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    கடலூர் அருகே உள்ள குண்டுஉப்பலவாடி பூந்தென்றல் நகரில், பெண்ணையாற்றில் ஆண் சடலம் ஒன்று மிதந்த நிலையில் கிடந்ததை அப்பகுதியினர் ஞாயிற்றுக்கிழமை பார்த்தனர். பின்னர், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராமலிங்கத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் சுமார் 30 வயது மதிக்கத்தக்கவராக இருப்பதாகவும், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லையெனவும் போலீஸார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai