Enable Javscript for better performance
கைலாசநாத அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் உள்ள கைலாசநாத அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கடலூர் வண்ணாரப்பாளையம் கே.கே.நகரில் ஸ்ரீபூரணிபொற்கலை உடனுறை ஸ்ரீகைலாசநாத அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை பூஜைகள், புதிய விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    ஞாயிற்றுக்கிழமை காலை 2ஆம் கால யாக பூஜை, நாடி சந்தனம், நேத்ரசந்தானம் நடத்தப்பட்டது. பின்னர், கலசங்களில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் கோயிலைச் சுற்றிலும் கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கும், சுவாமிக்கும் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பெரியாண்டவர், முத்தாலம்மன், பால விநாயகர், பால முருகன், தட்சணாமூர்த்தி, விஷ்ணுதுர்கை மற்றும் நவக்கிரகங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகாதீபாராதனை நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai