சுடச்சுட

  

  சிதம்பரத்தில் இன்று நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்

  By சிதம்பரம்,  |   Published on : 07th March 2016 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரத்தில் இரு தரப்பினரால் நடத்தப்படும் நாட்டியாஞ்சலி விழா வெவ்வேறு இடங்களில் திங்கள்கிழமை மாலை தொடங்கி நடைபெற உள்ளது.

  சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சார்பில் நடத்தப்படும் நாட்டியாஞ்சலி விழா கோயிலுக்குள்ளும், நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் நடத்தும் நாட்டியாஞ்சலி விழா தெற்குவீதி ராஜாசர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை வளாகத்திலும் தொடங்கி நடைபெறுகிறது.

  நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா (மாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை):

  சென்னை ஸ்ரீராகவேந்திரா இசை நாட்டியாலயா மாணவிகளின் பரதம், கள்ளக்குறிச்சி பால சரஸ்வதி கலைக்கூட மாணவிகள், சென்னை ரம்யா சுரேஷ், சென்னை ஸ்ரீசரசவாணி கலாமந்திர் மாணவிகள், சென்னை வி.எஸ்.தர்ஷினி, சென்னை அனிருத்கேநைட், மும்பை ஜெயஸ்ரீ ராஜகோபாலன், நிருத்தியோதயப்பள்ளி பத்மாசுப்பிரமணியம், மும்பை பிரெக்ஹா பேசில், மும்பை சௌந்தர்ய நாட்டிய கலாலயம், சென்னை சந்தியா ஈஸ்வர், சென்னை ஜெயப்பிரியா விக்ரமன், பெங்களூர் ரேகாராஜு, சிதம்பரம் சிவசக்தி இசை நடனப் பள்ளி மாணவர்கள், மும்பை ஸ்ரீராஜராஜேஸ்வரி பரதநாட்டியா கலாமந்திர், சிவகாசி நிருத்தியாஞ்சலி நாட்டியப் பள்ளி மாணவர்கள், ஆஸ்திரேலியா தில்லை நாட்டியாலயா நாட்டியப் பள்ளி மாணவர்கள், சென்னை மகாலட்சுமி பக்தவத்சலம், கொச்சின் பிரதீப் பிரகாஷ், ரகுநாராயணன், சென்னை ஜே.சூர்யநாராயணமூர்த்தி மற்றும் மாணவர்கள், ஆத்தூர் சிவகலா ஷேத்ரா நாட்டியப் பள்ளி மாணவர்கள், தில்லி குச்சுப்புடி ஆர்ட்ஸ் சொசைட்டி அபினயா ப்ரணிதா, சென்னை குச்சுப்புடி ஆர்ட் அகாதெமி மாணவர்கள், சிதம்பரம் கலைவாணி நாத நாட்டியாலயா மாணவர்கள், சென்னை நந்தினி முருகன் மற்றும் சென்னை பவானி நாட்டியாலயா மாணவர்கள்.

  ராஜாசர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை வளாகம் (மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை):

  அரியலூர் தகதிமிதா பள்ளி மாணவர்கள், ரீயூனியன் தீவுகள் காவேரி சுப்ராயண் குழுவினர், தனஞ்செயன், சாந்தா, சென்னை வாலண்யா அனந்த், கனகசபை நாட்டியப் பள்ளி மாணவர்கள், அமர்நாத் கோஷ், பெஹநாஸ் தோடிவாலா குழுவினர் மற்றும் சென்னை ஹிமஜா ராம்சரண்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai