சுடச்சுட

  

  மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

  ஒவ்வொரு மாதமும் தோன்றும் பிரதோஷ நட்சத்திரத்தில் சிவனின் வாகனமான நந்திப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை தோன்றிய பிரதோஷ நட்சத்திரத்தை முன்னிட்டு கடலூர் பாடலீசுவரர் கோயிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகத்துக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பால், சந்தனம், பன்னீர், விபூதி, குங்குமம் மற்றும் வாசனைத் திரவியங்கள், மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாடலீசுவரர், பெரியநாயகி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

  இதேபோல் மாவட்டம் முழுவதும் சிவன் கோயில்களில் உள்ள நந்திக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai