சுடச்சுட

  

  வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் 9 வாக்குச்சாவடி மையங்கள் முழுமையாக பெண்கள் மட்டுமே பணியாற்றும் வகையில் அமைக்கப்படுகின்றன.

  மாவட்டத்தில் திட்டக்குடி(தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

  சட்டப் பேரவைத் தேர்தலில் பெண்களை முன்னிலைப்படுத்தும் விதமாக 9 தொகுதிகளிலும் தலா ஒரு வாக்குச்சாவடி மையத்தில், முழுமையாக பெண்களை மட்டுமே பணியாற்றும் வகையில்

  நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

  அதாவது ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு அலுவலர், மேற்பார்வையாளர், விரலில் மை வைப்பவர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளுக்கும் பெண்களே நியமிக்கப்படுவார்கள். இது பெண்களால் சிறப்பாகவும், பயமின்றியும் தேர்தல் பணியில் ஈடுபட முடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடம் வளர்க்கும் விதமாக அமையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

  மாவட்டத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2,256 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு வாக்குச்சாவடியில் மட்டுமே இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

  பெண்கள் முழுமையாகப் பணியாற்றும் வாக்குச்சாவடி மையங்கள் எவை என்பது பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai