சுடச்சுட

  

  மாவட்டத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் மக்கள் நேர்காணல் முகாம்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் நேர்காணல் முகாம்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது, தமிழகத்தில் சட்டப் பேரவைத் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மார்ச் 7ஆம் தேதி முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் நேர்காணல் முகாம்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

  தேர்தல் நடைமுறைகள் முடிவுபெற்ற பின்னர் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai