சுடச்சுட

  

  மத்திய அரசு விருதுகளுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

  By கடலூர்  |   Published on : 07th March 2016 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசின் விருதுகளுக்கு தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எம்.ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விளையாட்டுத் துறையில் நமது தேசத்துக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டில் தொடர்புடையவர்களுக்கு பல்வேறு விருதுகளை இந்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அதன்படி 2015-16ஆம் ஆண்டுக்கான ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருது, அர்ஜுனா விருது, தயான்சந்த் விருது, ராஸ்டிரிய கேல் ப்ரோட்சஹான் புரஸ்கார் விருது, துரோணாச்சார்யா விருது ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் விருதுகளுக்கான பெயர்களை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116ஏ, ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை 84 என்ற முகவரிக்கு சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai