சுடச்சுட

    

    விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம்

    By நெய்வேலி,  |   Published on : 07th March 2016 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மண்டல தேர்தல் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம், நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கடலூர் மண்டலச் செயலர் சு.திருமாறன் தலைமை வகித்தார். கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் வ.க.செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்டச் செயலர் கதிர்வாணன் கருத்துரை வழங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்புச் செயலர் இளமாறன், தேர்தல் பணிகுழு மாநிலச் செயலர் குணவழகன், துணைச் செயலர் பன்னீர்செல்வம், நிதி செயலர் அறச்செல்வன், அன்பரசன், காசிநாதன், வெண்ணிலவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாவட்டப் பொருளர்கள் துரை.மருதமுத்து, சி.வே.கெய்க்வாட்பாபு, கங்கை அமரன், மாவட்ட துணைச் செயலர் திராவிடமணி, செய்தித் தொடர்பாளர் பூக்கடை ரவி, சட்டப்பேரவைத் தொகுதிச் செயலர்கள் அ.உ.அதியமான், மு.அறிவுடைநம்பி, அய்யாயிரம், அலெக்ஸாண்டர், ரா.நெடுமாறன், எல்.கே.மணவாளன், சட்டப்பேரவைத் தொகுதி துணைச் செயலர்கள் பாஷா பன்னீர் அஸ்கர் அலி, ஆறு.சுகுமாறன், ராவணன், பழனிவேல், பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், மார்ச் 8-ல் மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர், சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பது, பதட்டமான பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai