சுடச்சுட

  

  வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

  By கடலூர்,  |   Published on : 07th March 2016 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

  இந்த அமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச்செயலர் எம்.முஹம்மதுயூசுப் தலைமை வகிக்க, துணைப் பொதுச் செயலர் தவ்பீக் முன்னிலை வகித்தார்.

  கூட்டத்தில், இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசு வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் தனி இட ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும். முஸ்லிம் பல்கலைக்கழகங்களுக்கான சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்திட மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு கண்டனம் தெரிவிப்பது. மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்தில் நிர்வாகிகள் பாஜல்உசேன், மூசா, அப்துல்லாஹ், அப்துல்சலாம், தாஜிதீன், யாஸின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai