சுடச்சுட

  

  சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர் முதலை கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  காட்டுமன்னார்கோயில் வட்டம், மேலபருத்திக்குடி கிராமம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52). இவர் ஞாயிற்றுக்கிழமை கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் சிக்கிய முதலை அவரது இடது காலை கடித்து குதறியது.

  அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி குமராட்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  பின்னர், தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

  சுப்பிரமணியத்தை சிதம்பரம் வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார், வனக் காப்பாளர்கள் ராஜேஷ்குமார், செல்வராஜ் ஆகியோர் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai